வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 24 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
8abecd74-3b71-4962-9ba1-06064774e454
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று நண்பகல் வாக்கில் புதிதாக 24 பேருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள்.

மார்ச் 28ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து கிருமித்தொற்றுடன் வந்தவர்களின் எண்ணிக்கை இதுவே ஆக அதிகம்.

அந்த 24 பேருக்கும் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,377 ஆக உயர்ந்தது.

இன்று புதிதாக சமூகத்தில் யாருக்கும் தொற்று இல்லை. அதேபோல வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலும் யாருக்கும் தொற்று இல்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.

நேற்று புதிதாக 12 பேருக்குத் தொற்று இருந்ததாக அமைச்சு அறிவித்து இருந்தது.

அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்