சிங்கப்பூரில் மேலும் 9 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 58,386

சிங்கப்பூரில் மேலும் 9 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 58,386

1 mins read
8a9bab78-03d4-4580-bd9a-2af963c0ea18
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 18) புதிதாக ஒன்பது பேருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,386 ஆக உயர்ந்தது.

சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாரும் பாதிக்கப்படவில்லை

நேற்று 24 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மார்ச் 28ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து கிருமித்தொற்றுடன் வந்தவர்களின் எண்ணிக்கை இதுவே ஆக அதிகம்.

அவர்களில் 13 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். அவர்கள் ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தோனீசியா, மியன்மார், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

ஒருவர் இந்தோனீசியாவிருந்து வந்த கப்பல் பணியாளர். சிறப்பு விசா அட்டை வைத்திருக்கும் அவருக்கு டிசம்பர் 10ஆம் தேதி நோய் அறிகுறிகள் தென்பட்டன. அவர் தரை இறங்கவில்லை. அவர் ஆம்புலன்சில் நேராக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஏனையவர்களில் நால்வர் வேலை அனுமதி அட்டையில் இங்கு பணிபுரிவோர் அல்லது வேலைக்காக இங்கு வந்தவர்கள். இவர்கள் இந்தியா, இந்தோனீசியா, மாலத்தீவிலிருந்து வந்தவர்கள்.

ஐவர் பிரிட்டனிலிருந்து வந்த சார்ந்திருப்போர் அட்டை வைத்திருப்பவர்கள். இன்னொருவர் மாணவர் விசாவில் இருப்பவர்.

குறிப்புச் சொற்கள்