ஒன்றாம் வகுப்புக்கு மட்டும் ஜனவரி 4ல் பள்ளி திறப்பு; கல்வியாண்டு தொடங்கும் தேதிகளில் மாற்றம்

2 mins read
bfa98fac-0075-44de-a739-6dd46c946f1c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கல்வி அமைச்­சின் கீழ் இயங்­கும் பாலர் பள்­ளி­க­ளி­லும் தொடக்­கப்­பள்­ளி­க­ளி­லும் புதிய கல்­வி­யாண்டு ஜன­வரி 4ஆம் தேதி தொடங்­க­வுள்­ளது. எனி­னும், தொடக்­க­நிலை ஒன்று, பாலர் வகுப்பு ஒன்று மாண­வர்­கள் மட்­டுமே அந்­நா­ளில் பள்­ளிக்­குச் செல்­வர்.

பாலர் வகுப்பு இரண்­டி­லும் தொடக்­க­நிலை இரண்டு முதல் ஆறு வரையிலும் பயி­லும் மாண­வர்­க­ளுக்­குக் கூடு­த­லாக ஒரு விடு­முறை நாளாக அன்று அமைந்­தி­டும். அவர்­கள் ஜன­வரி 5ஆம் தேதி­ பள்­ளிக்­குச் செல்­ல­வேண்டும் என்று கல்வி அமைச்சு நேற்று அறி­வித்­தது.

சிறப்­புக் கல்­விப் பள்­ளி­களும் உயர்­நி­லைப் பள்­ளி­களும் ஜன­வரி 4 அன்று திறக்­கும். தொடக்­கக் கல்­லூ­ரி­கள், மில்­லே­னியா கழ­கம் ஆகி­யவை ஜன­வரி 11ஆம் தேதி­யன்று திறக்­கும் என்று அமைச்சு தெரி­வித்­தது. வெவ்­வேறு நாட்­களில் பள்ளி தொடங்­கு­வ­தால் இளம் பிள்­ளை­க­ளைப் புதிய பள்ளிச் சூழலுக்கு வர­வேற்­ப­தில் மேலும் அதி­கக் கவ­னம் செலுத்த முடி­யும் என்­றும் பாது­காப்பு நிர்வாக நட­வ­டிக்­கை­கள் சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை உறு­தி­செய்ய முடி­யும் என்­றும் கல்வி அமைச்சு கூறி­யது.

"தேவை ஏற்­பட்­டால், பெற்­றோரில் ஒரு­வர் மட்­டும் தங்­க­ளின் தொடக்­க­நிலை ஒன்று/பாலர் நிலை ஒன்று படிக்­கும் பிள்­ளைக்­குத் துணை­யாக இருக்­க­லாம். புதிய சூழ­லில் பழ­கிக்­கொள்ள முடி­வ­து­டன் அனைத்து மாண­வர்­கள் பாதுகாப்­பா­க­வும் இருப்­பர்," என்­றது அமைச்சு.

தொடக்­க­நிலை ஒன்று மாண­வர்­க­ளுக்­குப் புதிய பள்­ளிச் சூழலுக்குப் பழ­கிக்­கொள்ள பல அம்சங்­கள் இருப்­ப­தால் அவர்­க­ளுக்கு முத­லில் பள்ளி தொடங்­கு­வது சிறப்பு என்று சில பெற்றோர்­கூறினர்.

மற்ற நிலை­க­ளுக்­குக் கூடு­த­லாக ஒரு விடு­முறை நாள் கிடைத்­தி­ருப்­ப­தால் பள்­ளிக்­குத் தயா­ராக மேலும் ஒரு நாள் கிடைத்­துள்­ளது என்­பது வேறு சில பெற்­றோ­ரின் எண்­ணம்.

பெரும்­பா­லான இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், பள்ளி நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வை­யும் மீண்­டும் தொடங்­க­வுள்­ளன.

இருப்­பி­னும், கிரு­மி பர­வும் அபா­யம் அதி­க­முள்ள நட­வ­டிக்­கை­கள் நடை­பெ­றாது. அத்­து­டன் மாண­வர்­கள் சிறு குழுக்­க­ளாக மட்­டுமே நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யும்.

இதற்­கி­டையே, பாலர் பள்­ளி­களில் இயங்கி வரும் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், ஜன­வரி 4ஆம் தேதி­யன்று பாலர் நிலை இரண்டு மாண­வர்­க­ளுக்­குத் திறந்­தி­ருக்­காது என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

அன்று பாலர் நிலை ஒன்று மாண­வர்­களும் அவர்­க­ளின் பெற்­றோ­ரும் பரா­ம­ரிப்பு நிலை­யத்­திற்கு வருகை அளிப்­ப­தால் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது.

இருப்­பி­னும், தொடக்­கப்­பள்­ளி­களில் இயங்கி வரும் மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் ஜன­வரி 4 முதல் அனைத்து நிலை­களில் படிக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் திறக்கப்படும்.

பள்ளி திறந்­த­தும் மாண­வர்­கள் தங்­க­ளின் 'டிரேஸ்­டு­கெ­தர்' சாதனங்­களை வைத்­தி­ருப்­பது கட்­டா­ய­மல்ல. ஆனால், நா­ளடை­வில் சாதனங்­க­ளின் விநி­யோ­கம் முடிந்­த­வு­டன் சாதனங்­க­ளின் பயன்­பாடு பள்­ளி­களில் கட்­டா­ய­மாக்­கப்­படும். மாண­வர்­க­ளைக் கண்­கா­ணிப்­பது, உடல் வெப்­ப­நி­லை­யைச் சோதிப்­பது, உயர் சுகா­தா­ரத் தரத்­தைக் கட்­டிக்­காப்­பது, பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­பது போன்ற பாது­காப்பு நிர்­வாக நட­வடிக்­கை­கள் தொடர்ந்து பின்­பற்­றப்­படும்.

குறிப்புச் சொற்கள்