டெங்கி பாதிப்பு குறைந்துள்ளது

சிங்­கப்­பூ­ரில் டெங்கி பாதிப்பு எண்­ணிக்கை குறைந்­துள்­ளது. கடந்த வாரம் 228 பேர் டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவ்­வாண்­டில் பதி­வான ஆகக் குறை­வான வாராந்­தர எண்­ணிக்கை இது. தொடர்ந்து நான்­கா­வது வார­மாக டெங்கி பாதிப்பு எண்­ணிக்கை 300க்கு குறை­வாக உள்­ளது என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

ஜூலை மாதத்­தில் ஆக அதி­க­மாக ஒரே வாரத்­தில் 1,792 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இந்த ஆண்டு டெங்கி நோயால் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 29 ஆக உயர்ந்­தது.

டெங்கி தொற்று பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரும் சமூ­கத்­தின் முயற்­சி­கள் கார­ண­மாக, ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து படிப்­ப­டி­யாக பாதிப்­ப­டை­வோர் எண்­ணிக்கை குறைந்­தது என்று சுற்­றுப்­புற வாரி­யத்­தின் துணை தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யும் பொது சுகா­தார தலைமை இயக்­கு­ந­ரு­மான திரு செவ் மிங் ஃபாய் கூறி­னார்.

நேற்­றைய நில­வ­ரப்­படி, சிங்­கப்­பூ­ரில் 57 டெங்­கிப் பர­வல் இடங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டன.

இவ்­வாண்­டுத் தொடக்­கத்­தில் இ­ருந்து 3,060 இடங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டன. அவற்­றில் சுமார் 98 விழுக்­காட்டு இடங்­களில் டெங்­கிப்­ப­ர­வல் முற்­றி­லு­மாக ஒழிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய நில­வ­ரப்­படி 230 குடி­யி­ருப்­புப் பகு­தி­கள் ஏடிஸ் கொசுக்­கள் அதி­க­முள்ள இடங்­க­ளாக உள்­ளன. தெம்­ப­னிஸ் ஸ்தி­ரீட் 11, கேலாங் ரோடு, புக்­கிட் பாத்­தோக் ஸ்ட்­ரீட் 21, அட்­மி­ரல்ட்டி டிரைவ் ஆகிய இடங்­களில் பெரிய அள­வி­லான டெங்­கிப் பர­வல் உள்­ளது. அவற்­றில் தீவி­ர­மான ஏடிஸ் கொசு ஒழிப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இவ்­வாண்டு ஜன­வரி முதல் நவம்­பர் வரை­, கொசு உற்­பத்­தி­யா­கும் இடங்­க­ளைக் கண்­டு­பி­டிக்க நாடெங்­கும் கிட்­டத்­தட்ட 954,000 சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. கொசு உற்­பத்­தி­யான இடங்­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் மீது 7,060 அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்று வாரி­யம் குறிப்­பிட்­டது.

ஜூலை 15ஆம் தேதி முதல் மீண்­டும் மீண்­டும் கொசு வளர்ப்பு குற்­றங்­க­ளைச் செய்­யும் வீடு­க­ளுக்கு கடு­மை­யான தண்­ட­னை­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

அப்­போ­தி­ருந்து, வாரி­யத்­தின் சோத­னை­களில் ஏறக்­கு­றைய 260 குடி­யி­ருப்­புப் பகு­தி­கள் இடம்­பெற்­றன.

ஒரு முறைக்கு மேல் குற்­றம் புரிந்­த­தாக 18 குத்­த­கை­யா­ளர்­கள் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!