சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 19) புதிதாக 17 பேருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள்.
அவர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,403 ஆக உயர்ந்தது.
சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாரும் பாதிக்கப்படவில்லை.

