'வேலைச் சந்தை நம்பிக்கை தருகிறது'

'வேலைச் சந்தை நம்பிக்கை தருகிறது'

2 mins read
5d5d515e-919e-4d2f-a58e-653be00b6999
சில துறைகள் மந்தமான நிலையில் இருந்தாலும் பொதுவாக வரும் 2021ஆம் ஆண்டில் வேலைச் சந்தையில் நம்பிக்கைக்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று தொழிலாளர் தலைவர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சில துறைகள் மந்தமான நிலையில் இருந்தாலும் பொதுவாக வரும் 2021ஆம் ஆண்டில் வேலைச் சந்தையில் நம்பிக்கைக்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று தொழிலாளர் தலைவர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.

விமானத் துறை, விண்வெளித் துறைகள், இவை சார்ந்த பொறியியல் துறைகள், விருந்தோம்பல், சுற்றுலா ஆகியவை மந்த நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளது என்ற அவர், இத்துறைகள் "உயிர்வாழ்தல், நிலைபெற்றிருத்தல்" நிலை யில் உள்ளதைச் சுட்டினார்.

எனினும், சுகாதாரம், உயிரியல் தொழில்நுட்பம், தளவாடப் போக்குவரத்து போன்றவை ஒட்டுமொத்தமாக சாதகமான நிலையில் இருக்க வேண்டும். அதேநேரத்தில் 2020ஆம் ஆண்டில் பொருளி யல் நிலைமை எவ்வாறு மீட்சி பெறுகிறது என்பதைத் தீர்மானிப்பதில் உள்ளூர், உலகளாவிய சுகாதார நிலைமை முக்கிய காரணியாக இருக்கும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

"பொதுவாக, பெரும்பாலான ஊழியர்களும் வர்த்தகங்களும் முன்னேற்றத்தைக் காண் பார்கள்" என்றார் திரு இங்.

'2021ஆம் ஆண்டில் வேலை இழப்புகள், வாய்ப்புகள்' பற்றிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் இணையக் கருத்தரங்கில் அவர் பேசினார். பத்திரிகையின் உதவி செய்தி ஆசிரியர் தோ யோங் சுவான் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

ஊழியர்களுக்கான தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) உத்தியானது, தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிந்திருப்பது, இன்றைய சூழலுக்குத் தேவைப்படும் புதிய திறன்களுக்கு மாறுவதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுவது என்றார் அவர்.

தொற்றுநோய் சூழலிலும் வேலைகளைப் பாதுகாக்க ஊழியர்களை மற்ற நிறுவனங் களுக்கு அனுப்புவது போன்ற முறைகள் மூலம் திறனாளர் களைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்று கருத்தரங்கில் பேசிய சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தில் தலைவர் ராபர்ட் யாப் குறிப்பிட்டார்.

"ஊழியர்கள் திறந்த மனப்பான்மையுடன் இருந்தால் அவர்கள் வாழ்நாள் கற்றலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வர். திறன், மறுதிறன் தேர்ச்சிகளில் ஆர்வம் காட்டுவார்கள். சிங்கப்பூரில் வேலை கிடைப்ப தில் பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன்," என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்