சிங்கப்பூர் போலிஸ் படையின் மோசடி தடுப்பு நிலையமும் சிட்டி வங்கி, ஆர்எச்பி பேங்க் பெர்ஹாட் சிங்கப்பூர் ஆகியவை இணைந்து US$1.9 மில்லியன் (S$2.54 மில்லியன்) மோசடியை முறியடித்துள்ளன.
ஆர்எச்பி வங்கிக்கு மாற்றிவிடப்பட்ட US$1.9 மில்லியன் தொகையை உடனடியாக மீட்குமாறு கடந்த 18ஆம் தேதி சிட்டி வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த ஆர்எச்பி வெளிநாட்டு நிறுவன வங்கிக் கணக்கு எனத் தெரிவிக்கப்பட்டது.
சிட்டி வங்கி போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அந்த ஆர்எச்பி வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்பட்டது. அதனால், பண மோசடி தடுக்கப்பட்டது.
வர்த்தக மின்னஞ்சல் தொடர்பான பண மோசடியாக இது இருக்கலாம் என்று கூறப்பட்டது.


