சையது ஆல்வி ரோட்டில் $30,000 பணம் பறிப்பு; ஆடவர் கைது

சையது ஆல்வி ரோட்டில் $30,000 பணம் பறிப்பு; ஆடவர் கைது

1 mins read
c7a8319a-0806-4db6-aa9a-4876a4227e5a
படம் / செய்தி: ஸ்டோம்ப் -

சிங்கப்பூரின் சையது ஆல்வி ரோட்டில் ஆடவரிடம் $30,000 பறித்ததன் தொடர்பில் 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகம் தொடர்பில் தாம் சந்தித்த ஒருவரிடமிருந்து அந்த நபர் பணத்தைப் பறித்ததாகக் கூறப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் இம்மாதம் 12ஆம் தேதி காலை 1.30 மணியளவில் போலிசுக்குத் தகவல் கிடைத்தது.

பணத்தைப் பறிகொடுத்தவரும் பறித்தவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும் அவர்கள் இருவரும் வர்த்தக பரிவர்த்தனையின் தொடர்பில் சையது ஆல்வி ரோட்டில் சந்தித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புலனாய்வுக்குப் பிறகு, மத்திய போலிஸ் பிரிவு அதிகாரிகள் பணம் பறித்தவரின் அடையாளத்தை உறுதி செய்து அவரை கடந்த 17ஆம் தேதி ஸ்காட்ஸ் ரோட்டில் கைது செய்யப்பட்டார்.

பணம் பறித்ததன் தொடர்பில் அந்த ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒராண்டு முதல் ஏழாண்டுகள் வரை சிறை, பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்