மணமுறிவு தொடர்பான செலவுகளிலிருந்து விடுபட நீதிமன்றத்தில் பொய்யுரைத்தவருக்கு சிறை

மணமுறிவு தொடர்பான செலவுகளிலிருந்து விடுபட நீதிமன்றத்தில் பொய்யுரைத்தவருக்கு சிறை

2 mins read
d68040c2-0ae8-4dd1-9a0d-03e5fd1507cb
படம்: பிக்ஸ்பை -

மனமுறிவு தொடர்பான செலவுகளிலிருந்து விடுபட, புதிதாக திருமணம் செய்த தமது மனைவி தம்முடன் தாம்பத்திய உறவுக்கு சம்மதிக்கவில்லை என்பதால், தங்களுக்கிடையே நடந்த திருமணத்தை ரத்து செய்ய தாம் விரும்புவதாக பொய்யுரைத்து, டேரில் லிம் சுன் லெங் எனும் 25 வயது ஆடவர் விண்ணப்பம் செய்திருந்தார்.

மேலும் மணமுறிவானவர் என்று தாம் அழைக்கப்படுவதை விரும்பாத திரு லிம், தமது திட்டத்துக்கு அப்போதைய மனைவியைச் சம்மதிக்க வைத்தார். அதற்கு பிரதிபலனாக முன்னாள் மனைவியின் எதிர்காலத் திட்டத்துக்கு தாம் ஒத்துழைப்பு நல்குவதாகக் கூறினார்.

நீதிமன்றத்தில் பொய்யுரைத்த குற்றத்துக்காக லிம்முக்கு நேற்று ஒரு வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திரு லிம்மும் 24 வயது குமாரி வெங் கெச்செனும் 2017 ஜனவரி யில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அதே ஆண்டு ஜூன் மாதத்தில், திருமதி வெங் மற்றொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார் என்று லிம்முக்கு தெரிந்தவுடன் அவர்களின் மணவாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் மணமுறிவுக்கு விண்ணப்பித்தால் அதன் தொடர்பான செலவு, திருமணத்தை ரத்து செய்வதற் கான செலவைவிட அதிகம் என்றும் அவர்கள் இருவரும் மணமுறிவு பெற்றவர்கள் என்று ஆவணங்களில் குறிப்பிட வேண்டியிருக்கும் என்றும் காரணங்காட்டி லிம், தமது மனைவியைத் தாம் கூறும் பொய்க்கு ஆதரவு தெரிவிக்க கேட்டுக்கொண்டார்.

ஆனால், திரு லிம்முக்கும் அவரது மனைவிக்கும் இடையே தாம்பத்திய உறவு இருந்தது பின்னர் வெளிச்சத் துக்கு வந்தது. நீதிமன்றத்தில் பொய்யுரைத்ததற்காக லிம்முக்கு இரண்டு ஆண்டு சிறையும் அபராதமும் விதிக்கப் பட்டிருக்கலாம். திரு லிம் தமது சிறைவாசத்தை ஜனவரி 4ஆம் தேதி தொடங்குவார்.

குறிப்புச் சொற்கள்