சிங்கப்பூரில் தடுப்பூசி போடும் நடவடிக்கைக்கு முன் பல்வேறு பாதுகாப்புச் சோதனைகள்

1 mins read
95623b28-5da8-430c-9ada-13c5dc39ffce
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கு முன் பல்வேறு பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படும். நேற்று முன்தினம் இரவு முதலாவது தொகுப்பு ஃபைசர்-பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிகள் சிங்கப்பூரை வந்தடைந்தது.

கிருமித்தொற்றை விரைவில் முறியடிப்பது அனைவரது நோக்கமாக இருந்தாலும் இங்கு தடுப்பூசிகள் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின்படி பயன்படுத்தப்படும் என்று இணைப் பேராசிரியர் டான் சே பெங்கும் பேராசிரியர் பெஞ்சமின் சீட்டும் தெரிவித்தனர்.

முதலில், அந்தத் தடுப்பூசி மனிதர்களுக்குச் செலுத்துவ தற்கு முன் விலங்குகளிடம் செலுத்தி கண்காணிக்கப்படும். அதில் சாதகமான முடிவுகள் வந்தவுடன், தடுப்பூசி சோதனைகளில் பங்கேற்க சம்மதித்த சுமார் 100 தொண்டூழி யர்களிடம் அது செலுத்தப்படும். பின்னர் மூன்றாம் கட்டச் சோதனையாக ஆயிரக்கணக்கான மக்களிடம் செலுத்தி சோதிக்கப்பட்டு, அணுக்கமாக கண்காணிக்கப்படும் என்று விவரிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்