வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 21 பேருக்கு கொவிட்-19

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 21 பேருக்கு கொவிட்-19

1 mins read
69712a30-c2be-489d-bc8e-6fcb12085568
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 23) நண்பகல் நிலவரப்படி புதிதாக 21 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

அவர்கள் சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு வீட்டில் தங்கியிருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்தது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் எண்மர் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள். 9 பேர் இல்லப் பணிப்பெண்கள்.

இதற்கிடையே, சமூக அளவிலோ அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாருக்கும் தொற்று இல்லை என்றும் அமைச்சு கூறியது. இன்று பதிவான சம்பவங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 58,482.

குறிப்புச் சொற்கள்