புத்தாண்டை முன்னிட்டு, டிசம்பர் 31ஆம் தேதி பயணிகளின் வசதிக்காக பேருந்து, ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு - தெற்கு ரயில் தடம், கிழக்கு - மேற்கு ரயில் தடம் ஆகியவற்றில் மரினா சவுத் பியர், ஜூரோங் ஈஸ்ட், பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க் ஆகிய இடங்களுக்கு சிட்டி ஹாலிலிருந்து ஜனவரி முதல் தேதி அதிகாலை 1 மணிக்கு ரயில்கள் கிளம்பும்.
வட்டப் பாதை ரயில் தடத்தில் டோபி காட்டிலிருந்து அதிகாலை 12.27 மணிக்கு ஹார்பர்ஃபிரான்டை நோக்கி ரயில்கள் கிளம்பும்.
ஹார்பர்ஃபிரான்டிலிருந்து அதிகாலை 12.24 மணிக்கு டோபி காட்டை நோக்கி ரயில் கிளம்பும்.
வடக்கு - கிழக்கு ரயில் தடம், டவுன்டௌன் ரயில் தடம் ஆகியவற்றிலும் ரயில் சேவை குறைந்தபட்சம் 1 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கு ரயில் பாதையில் ஹார்பர்ஃபிரான்டிலிருந்து அதிகாலை 1 மணிக்கு பொங்கோலை நோக்கி ரயில்கள் கிளம்பும். அதே பாதையில் பொங்கோலிலிருந்து அதிகாலை 12.32 மணிக்கு ஹார்பர்ஃபிரான்டை நோக்கி ரயில் கிளம்பும்.
டவுன்டௌன் ரயில் பாதையில் புக்கிட் பாஞ்சாங், எக்ஸ்போ நிலையம் ஆகியவற்றுக்கிடையே இரு திசைகளிலும் அதிகாலை 12.34 மணிக்கு ரயில்கள் கிளம்பும்.
இவற்றையொட்டி பேருந்துகள், இலகு ரயில் சேவைகளும் கூடுதல் நேரத்துக்கு சேவை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எஸ்பிஎஸ் டிரான்சிட் சேவைகளான 60A, 63M, 181, 222, 225G, 228, 229, 232, 238, 240, 241, 243G, 261, 269, 291, 292, 293, 315, 325, 410W, 804 and 812 ஆகிய பேருந்துச் சேவை நேரமும் நீட்டிக்கப்படும். இந்தச் சேவைகளின் கடைசி பேருந்துகள் புறப்படும் நேரம் பின்னிரவு 1.25 முதல் 2.05 மணி வரை இருக்கும்.
சில எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவை நேரமும் நீட்டிக்கப்படும். புக்கிட் பாஞ்சாங் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் இருந்து சேவை எண் 920, 922 and 973A ஆகியவை பின்னிரவு 1.50 மணிக்கு புறப்படும். சுவா சூ காங் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் இருந்து சேவை எண்கள் 300, 301, 302, 307, 983A ஆகியவை பின்னிரவு 2.05 மணிக்கு புறப்படும்.
செம்பவாங் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் இருந்து சேவை எண் 859A, 883A ஆகிய கடைசி பேருந்துகள் பின்னிரவு 2 மணிக்கு புறப்படும். உட்லண்ட்ஸ் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் இருந்து சேவை எண் 901, 911, 912 and 913 ஆகியவை பின்னிரவு 1.55 மணிக்கு புறப்படும்.