சிங்கப்பூரில் மேலும் அதிகமானோருக்குத் தடுப்பூசி தேவைப்படலாம்

சிங்கப்பூரில் மேலும் அதிகமானோருக்குத் தடுப்பூசி தேவைப்படலாம்

1 mins read
61a4c250-94d4-420a-a7cc-347b3b7b804f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் குறைந்­தது 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொரோனா தடுப்­பூசி போட முத­லில் இலக்கு வகுக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் பி117 எனப்­படும் புதிய வகை கொரோனா கிரு­மித்­தொற்று சில நாடு­களில் பரவி வரு­வ­தால் மக்­கள்­தொ­கை­யில் குறைந்­தது 90 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட வேண்­டும் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹொக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி ­யின் தலை­வர் பேரா­சி­ரி­யர் டியோ யிக் யிங் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த புதன்­கி­ழ­மை­யன்று பிரிட்­ட­னி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்த 17 வயது சிங்­கப்­பூர் பெண், புதிய வகை கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்