டோமினோ'ஸ் பீட்சா ஊழியரைத் தாக்கிய ஆடவர் கைது

டோமினோ'ஸ் பீட்சா ஊழியரைத் தாக்கிய ஆடவர் கைது

1 mins read
394fa0e8-ddb3-4d45-859f-c9230593af4c
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் ஆடவர் ஒருவர் மற்றவரை முகத்தில் குத்தியது, கூந்தலைப் பிடித்து தரையில் இழுத்தது போன்றவை பதிவாகியிருந்தன. படம்: இணையம் -

கிறிஸ்மஸ் தினத்தன்று 505 வெஸ்ட் கோஸ்ட் டிரைவ்வில் உள்ள டோமினோஸ் பீட்சா ஊழியரைத் தாக்கி காயம் விளைவித்ததற்காக 39 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்று பிற்பகல் 3.39 மணியளவில் நிகழ்ந்த சண்டையில் காயமடைந்த 23 வயது ஆடவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் ஆடவர் ஒருவர் மற்றவரை முகத்தில் குத்தியது, கூந்தலைப் பிடித்து தரையில் இழுத்தது போன்றவை பதிவாகியிருந்தன.

காயமடைந்தவர் அந்தக் கடையின் மேலாளார் என்று அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்