தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின் கட்டணம் குறையும்; எரிவாயு கட்டணம் கூடும்

1 mins read
ff2bd8fd-ad05-46a0-8623-4f0052018a0b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு 3.2% குறையும். அதேவேளையில், எரிவாயுக் கட்டணம் 0.23% கூடும்.

சராசரியாகப் பார்க்கையில் வீவக நான்கறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு மாத மின் கட்டணம், ஜிஎஸ்டி வரிக்கு முன்னதாக $2.39 குறையும் என்று எஸ்பி குழுமம் தெரிவித்து உள்ளது.

எரிவாயுக் கட்டணம் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை ஜி எஸ்டி வரிக்கு முன்னதாக, கிலோவாட்மணி (kWh) ஒன்றுக்கு 17.19 காசு என்ற அளவில் இருந்து 17.23 காசாகக் கூடும் என்று சிட்டி கேஸ் நிறுவனம் கூறியது.

2020 மூன்றாவது காலாண்டில் எரிவாயுக் கட்டணம் குடும்பங்களுக்கு 5% கூடியது. மின் கட்டணம் ஏறக்குறைய 9% அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்