பிரித்தம் சிங்: புத்தாண்டில் பாட்டாளிக் கட்சி மாற்று கொள்கைகள் பற்றி தொடர்ந்து எடுத்துரைக்கும்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரான பிறகு கட்சி சார்பில் முதலாவது புத்தாண்டு செய்தியை வெளியிட்ட திரு பிரித்தம் சிங், சிங்கப்பூரர்களின் தேவைகளைப் பிரதிநிதிக்கும் வகையில் தமது கட்சி தொடர்ந்து மாற்றுக் கொள்கைகள் பற்றி வலுவாக எடுத்துரைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு ஒரு மாற்றுக் குரலாக, சிங்கப்பூர் அரசியல் முறையை சமநிலைப்படுத்தும் ஓர் அரணாக பாட்டாளிக் கட்சி தொடர்ந்து மிதமான பாதையில் பயணிக்கும் என்று திரு சிங் நேற்று ஊடகத்துக்கு வழங்கிய தமது செய்தியில் கூறியிருந்தார்.

அவரது கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத் தொகுதியிலும் செங்காங் குழுத் தொகுதியிலும் ஹவ்காங் தனித்தொகுதியிலும் வென்று நாடாளுமன்றத்தில் பத்து இடங்களைப் பிடித்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு உள்ள அரசியல் களத்தில் எந்தவோர் எதிர்க்கட்சியும் இவ்வளவு அதிகமான இடங்கள் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் காரணமாக பிரதமர் லீ சியன் லூங், பிரித்தம் சிங் எதிர்தரப்பின் தலைவர் என்ற புதிய பதவியை அளித்து கௌரவித்தார்.

அப்போது பேசுகையில் திரு லீ, நாடாளுமன்றத்தில் அதிகமான மாற்றுக் குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றார்.

தங்கள் கட்சிக்கு ஆதரவளித்த சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவித்்த திரு சிங் தமது செய்தியில், “பொதுத் தேர்தல் 2020ல் பாட்டாளிக் கட்சிக்குக் கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

“அத்துடன் வாக்காளர்கள் எங்கள் மீது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நாங்கள் கடுமையாக உழைத்து, சிங்கப்பூரில் சமநிலையான, பன்மை அரசியலை நிலைநிறுத்த பாடுபடுவோம்,” என்றார்.

கடந்த ஆண்டு பாட்டாளிக் கட்சி குறைந்தபட்ச சம்பளம், நீதிக்கான அணுகலை விரிவுபடுத்துதல், சிங்கப்பூரின் நிதி இருப்பின் பயன்பாட்டை மேம்படுத்துவது போன்றவை தொடர்பில் யோசனைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்ததை திரு சிங் நினைவுகூர்ந்தார்.

“கொவிட்-19 கொள்ளைநோய் பலரது வாழ்வாதாரங்களைப் பாதித்ததுடன், சமூகத்தில் ஒருவித அச்சத்தையும் நிலையில்லாத்தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

“பிறந்திருக்கும் புத்தாண்டும் ஒரு மலர் படுக்கையைப்போல் இருக்காது. குறிப்பாக, பொருளியலின் சில துறைகள் இன்னும் மீட்சி காணாமல் இருக்கிறது. மக்களில் சிலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர், சிலர் சம்பள வெட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என்று திரு சிங் விவரித்தார்.

கடந்த ஓராண்டு காலத்தில் சிங்கப்பூரர்கள் காட்டிய மீள்திறனுக்கும் சமூக ஒற்றுமைக்கும் நான் தலை வணங்குகிறேன். ஒரு பெரும் புயலைக் கடந்துவிட்ட ஒன்றுபட்ட மக்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்கிறேன். அடுத்த கட்ட சவா லுக்கு நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்,” என்றார் திரு சிங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!