வெளிநாடுகளிலிருந்து வந்த 35 பேருக்கு சிங்கப்பூரில் கொவிட்-19

வெளிநாடுகளிலிருந்து வந்த 35 பேருக்கு சிங்கப்பூரில் கொவிட்-19

1 mins read
2a7e64e3-aefc-4c16-80e7-59ba3cd3103e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 3) புதிதாக 35 பேருக்கு கொவிட்-19 பதிவானது. இதையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,697.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது. அவர்களில் 6 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; எழுவர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.

உள்ளூர் சமூகத்திலோ விடுதிகளிலோ யாருக்கும் தொற்று பதிவாகவில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாளில் பதிவான ஆக அதிக கிருமித்தொற்று எண்ணிக்கை இன்று பதிவானதே.

குறிப்புச் சொற்கள்