82 வீவக மறுவிற்பனை வீடுகள் சாதனை விலையில் விற்பனை; குறைந்தபட்சம் $1 மில்லியன்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் மறு­விற்­பனை அடுக்­கு­மாடி வீடு­கள் சென்ற ஆண்­டில் புதிய சாதனை படைத்­துள்­ளன.

குறைந்­த­பட்­சம் $1 மில்­லி­ய­னுக்­கும் அதிக தொகைக்கு வாங்­கப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்கை 2020ல் சாதனை அளவாக இருந்தது.

கொவிட்-19 தொற்று இருந்­தாலும் மறு­விற்­பனை சந்தை மிக வலு­வாக இருந்­தது என்­பது நிலச்­சொத்து இணை­ய­வா­சல் நிறு­வ­ன­மான எஸ்­ஆர்­எக்ஸ் வெளி­யிட்ட பூர்­வாங்க புள்­ளி­விவ­ரங்­கள் மூலம் தெரியவருகிறது.

ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதிக தொகை கொடுத்து சென்ற ஆண்­டில் 82 வீடு­கள் வாங்­கப்­பட்­டன.

இந்த எண்­ணிக்கை, 2019 முழு­மைக்­கும் 64 வீடு­க­ளாக இருந்­தது. டிசம்­ப­ரில் மட்­டும் 10 வீடு­கள் இந்த விலைக்­குக் கைமா­றின.

சென்ற ஆண்டில் விற்­கப்­பட்ட வீவக மறு­விற்­பனை வீடு­களில் மில்­லி­யன் விலை வீடு­க­ளின் அளவு 0.35% என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், தொடர்ந்து ஆறா­வது மாத­மாக டிசம்­ப­ரில் வீவக மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை கூடி­யது.

இதன் மூலம் 2020ல் மொத்த விலை உயர்வு 6.4% ஆகி­யது. இந்த உயர்வு 2019ல் 0.3%தான் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் சென்ற வாரம் முன் மதிப்­பீ­டு­கள் பற்­றிய விவ­ரங்­களை வெளி­யிட்­டது. 2020 மூன்­றா­வது காலாண்டு­டன் ஒப்­பி­டு­கை­யில், நான்­கா­வது காலாண்­டில் மறு­விற்­பனை விலை 2.9% கூடி­ய­தா­க­வும் நான்­கா­வது காலாண்டு விலை உயர்வு, 9 ஆண்டு­க­ளில் இல்­லாத அள­வுக்கு அதி­க­மாக இருந்­தது என்­றும் அந்த மதிப்­பீ­டு­கள் மூலம் தெரி­ய­வந்­தது. 2020 முழு­மைக்­கும் வீவக மறு­விற்­பனை விலை 4.8% அதி­க­ரித்­தது.

டிசம்­பர் மாதத்­தில் கைமா­றிய வீடு­களின் எண்­ணிக்கை 2,489 என்றும் கைமா­றிய வீடு­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து ஏழா­வது மாத­மாக டிசம்­ப­ரில் 2,000க்கும் அதி­க­மா­கவே இருந்­து­வந்­தது என்றும் எஸ்­ஆர்­எக்ஸ் வெளி­யிட்ட புள்­ளி­விவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

சென்ற ஆண்டு ஏப்­ரல், மே மாதங்­களில் முடக்­கம் நடப்­பில் இருந்­த­போது விற்­ப­னை­யில் கடும் இறக்­கம் இருந்­தது.

எஸ்­ஆர்­எக்ஸ் புள்­ளி­வ­வ­ரங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு பார்க்­கை­யில், 2020 முழு­மைக்­கும் மொத்­தம் 23,427 வீவக மறு­விற்­பனை வீடு­கள் கைமாறி இருக்­கின்­றன என்­ப­தும் இது 2019ஐவிட 4.3% அதி­கம் என்­ப­தும் தெரிய வரு­கிறது. டிசம்­ப­ரில் கைமா­றிய மில்­லி­யன் வெள்ளி வீடு­களில் சில வீடு­கள், பீஷான் ஸ்தி­ரீட் 24 மற்­றும் டோசன் ரோடு போன்ற வட்­டா­ரங்­களில் அமைந்­துள்­ளன.

நேச்சுரா லாஃப்ட்­டில் உள்ள டிபி­எஸ்­எஸ் ஐந்­தறை வீடு­தான் டிசம்­பரில் வாங்­கப்­பட்ட வீவக மறு­விற்­பனை வீடு­க­ளி­லேயே ஆக அதிக விலைக்­குக் கைமா­றி­யது. இதன் விலை $1,218,888 ஆக இருந்­தது.

இத­னி­டையே, வீவக மறு­விற்­பனைச் சந்தை இந்த ஆண்­டில் வலு­வா­கத் தொட­ரும் என்று வல்­லு­நர்­கள் தெரி­விக்­கி­றார்­கள். 2021ல் கைமா­றும் இத்­த­கைய வீடு­க­ளின் எண்­ணிக்கை 3% முதல் 5% வரை அதிகமாகி ஏறக்­கு­றைய 24,000 முதல் 26,000 வரை இருக்­கும் என்று அவர்­களில் ஒரு­வர் கணிக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!