விரைவுச்சாலையில் கார் விபத்து; மூவர் மருத்துவமனையில்

விரைவுச்சாலையில் கார் விபத்து; மூவர் மருத்துவமனையில்

1 mins read

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மரினா கரையோர விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் பிடோக் சவுத் வெளிச்சாலைக்கு அடுத்து நேற்று அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டிருப்பது குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இரு கார்கள் இந்த விபத்தில் சிக்கிக்கொண்டதாக போலிஸ் கூறியது.

23, 24 வயதில் இரு மாதர்களும் 25 வயது ஆடவர் ஒருவரும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக போலிஸ் கூறியது.

குறிப்புச் சொற்கள்