சிங்கப்பூரில் மேலும் 40 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 20) புதிதாக 40 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் அந்தத் தொற்றுக்கு ஆளானவர்களின்  மொத்த எண்ணிக்கை 59,197 ஆகியது.

புதிதாக தொற்றியோரில் 36 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

நான்கு பேர்  சமூகத் தொற்றுக்கு ஆளானவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. வெளிநாட்டு ஊழியர்கள் விடுதியில் யாருக்கும் புதிதாக தொற்று இல்லை.  

சீனாவைச் சேர்ந்த 33 வயது ஆடவருக்கு ஜனவரி 16 ஆம்தேதி தொற்று இருந்தது தெரியவந்தது. அவருடைய மனைவிக்கும் தொற்று  இருந்தது செவ்வாய்க்கிழமை பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.  

சீனாவைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் வேலை அனுமதிச்சீட்டுடன் இங்கு வேலை பார்ப்பவர்கள். அவர்கள் அணுக்கத் தொடர்பில் இருந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு சென்ற வெள்ளிக்கிழமை தனிமையில் வைக்கப்பட்டனர். 

இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை தொற்று இருப்பது தெரியவந்தது.  

சிங்கப்பூரில் சமூகத் தொற்று கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகிறது என்பதால் கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படக் கூடும் என்று திங்கட்கிழமை பல அமைச்சுகளைக் கொண்ட சிறப்புப் பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரான லாரன்ஸ் வோங் எச்சரித்து இருந்தார். 

அண்மைய வாரங்களில் ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று ஏற்பட்டு இருக்கும் சம்பவங்கள் இதையும் சேர்த்து இரண்டாகி உள்ளன. 

கால்நடை துணை மருத்துவர் தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடைய வேறு ஒரு   கிருமித்தொற்று சம்பவம் பற்றியும் அமைச்சு தெரிவித்தது. இதையும் சேர்த்து அந்தக் குழுமத்தின் கிருமித்தொற்று எண்ணிக்கை ஏழாகி உள்ளது.

சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் ஆகப் புதியவர் எட்டு வயது சிறுவன். 

சிறுவனின் தாயாருக்கும் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் சிறுவனின் தந்தைக்கும் ஏற்கெனவே தொற்று இருந்தது. 

இந்தச் சிறுவன் சுவா சூ காங் தொடக்கப் பள்ளியில் படிக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இவர் பள்ளிக்குச் சென்றார். 

சிறுவன் பெற்றோருடன் அணுக்கத் தொடர்பில் இருந்ததால் அடுத்த நாள் முதல் தனித்து வைக்கப்பட்டார். அதே நாளன்று பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்தச் சிறுவனுக்கு தொற்று இருந்தது தெரிந்தது. 

செவ்வாய்க்கிழமை கடைசியாக தெரிவிக்கப்பட்ட சமூகத் தொற்று சம்பவம் தனித்த ஒரு சம்பவம் ஆகும். 39 வயது நிரந்தரவாசியான அவர், காலாங்கில் வேலை பார்க்கிறார். 

செவ்வாய்க்கிழமை வெளிநாட்டில் இருந்து வந்த 26 பேருக்கும் தொற்று இருந்தது. அவர்களில் நான்கு பேர் சிங்கப்பூரர்கள். மூன்று பேர் நிரந்தரவாசிகள். 16 பேர் வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள். அவர்களில் மூவர் வீட்டு வேலை பணிப்பெண்கள். 

இருவர் மாணவர் படிப்பு அனுமதி பெற்றவர்கள். ஒருவர் வேலை அனுமதியின் பேரில் இங்கு வேலை பார்ப்பவர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.