இருமலா, காய்ச்சலா? அலட்சியம் வேண்டாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

உங்களுக்கு இருமலா, தொண்டை கரகரப்பா, மூக்கு ஒழுகுகிறதா? அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உங்களுக்கு கொவிட்-19 தொற்றாகக் கூட இருக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைப் பார்த்து மருத்துவ விடுப்பைப் பெறுவதே சிறந்ததாக இருக்கும் என்று தொற்றுநோய் வல்லுநர் டாக்டர் லியோங் ஹோ நாம் தெரிவிக்கிறார்.

கொவிட்-19 கிருமி கடுமையான சளிக்காய்ச்சலை ஏற்படுத்தக் கூடியது. இருந்தாலும் தொடக்கத்தில் அது சாதாரண கிருமியைப் போன்றுதான் இருக்கும் என்று அவர் விளக்கினார்.

போலிஸ் கால்நடை மருத்துவர் ஒருவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்குத் தொற்று இருந்தது தெரியவந்ததை அடுத்து இந்த ஆலோசனை இடம்பெறுகிறது.

அந்த ஏழு பேரில் நான்கு பேர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தங்களுக்கு இருந்த போதிலும் மருத்துவரை சென்று பார்க்கவில்லை. சுகாதார அமைச்சு தொடர்பு கொண்ட பிறகுதான் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.

பரிசோதனை செய்துகொள்ளும் ஒருவர் முடிவு தெரியும் வரை வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமானதாக இருக்கக்கூடும்.

இப்படிச் செய்வதன் மூலம் கொவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்க உதவ முடியும் என்று டாக்டர் லியோங் கூறினார். கிருமித்தொற்றை முன்னதாகவே கண்டுபிடித்து விட்டால் பல உயிர்களைக் காப்பாற்றிவிடலாம்.

கொவிட்-19 கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பலருக்கும் எந்த அறிகுறியும் வெளியே தெரியவில்லை என்று ரோஃபி கிளினிக் என்ற மருந்தகத்தில் தொற்று நோய் மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் லிங் லி மின் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று இருந்தால் வாசனை, சுவை உணர்வு இல்லாமல் போய்விடும் என்று டாக்டர் லிங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!