மருத்துவ அவசரநிலை காரணமாக 7 மணி நேரம் முன்னதாக திரும்பிய சொகுசுக் கப்பல்

சிங்கப்பூரில் ‘கோ நோவேர்’ திட்டத்தின் கீழ் ராயல் கரீபியன் சொகுசுக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவருக்குத் திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு ஏழு மணி நேரம் முன்னதாகவே அக்கப்பல் கரை திரும்பியது.

இன்று அதிகாலை 6 மணிக்கு சிங்கப்பூர் திரும்பியிருக்க வேண்டிய கப்பல் நேற்று இரவு திரும்பியது. நோய்வாய்ப்பட்டவருக்கு கொரோனா கிருமித்தொற்று இல்லை என்று ராயல் கெரிபியின் நிறுவனம் உறுதி செய்தது. 

கப்பல் கரை திரும்பியதும் உடல்நலம் குன்றிய பயணி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பயணி ஒருவருக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் அதன் காரணமாக கப்பல் கரை திரும்புவதாகவும் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அறிவிக்கப்பட்டதாக கப்பலில் இருந்த மற்ற பயணிகள் கூறினர். 

அறிவிப்பு செய்யப்பட்டு அரை மணி நேரத்தில் கப்பலில் இருக்கும் சூதாட்டக்கூடமும் சுங்க வரி இல்லாத பொருட்களை விற்கும் கடையும் மூடப்பட்டன.

கப்பல் சிங்கப்பூர் அடைந்ததும் அதில் இருந்த மற்ற பயணிகள் தொடர்ந்து அதில் தங்கி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon