சிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 22) நண்பகல் நிலவரப்படி புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 14 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

இன்று உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு மட்டும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. விடுதிகளில் புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை.

சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நால்வரில் மூவர் ‘பிஎஸ் இண்டஸ்ட்ரியல் & கன்ஸ்ட்ரக்‌ஷன் சப்ளை’ என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.

காலாங்கில் இருக்கும் அந்த நிறுவனத்தின் விற்பனை அதிகாரி ஒருவருக்கு கடந்த திங்கட்கிழமை கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

‘பிஎஸ் இண்டஸ்ட்ரியல் & கன்ஸ்ட்ரக்‌ஷன் சப்ளை’ நிறுவன ஊழியர்களுடன் தங்கியிருக்கும் இருவருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்தக் குழுமத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் 43 வயது சிங்கப்பூரர். ‘பிஎஸ் இண்டஸ்ட்ரியல் & கன்ஸ்ட்ரக்‌ஷன் சப்ளை’ நிறுவனத்தில் பணிபுரியும் அவரது கணவர்தான் அங்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நபர்.

அந்தக் குழுமத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு நபர் 46 வயது மலேசியர். வேலை அனுமதிச் சீட்டில் இங்கு பணிபுரிகிறார். அவரது வருங்காலக் கணவரும் ‘பிஎஸ் இண்டஸ்ட்ரியல் & கன்ஸ்ட்ரக்‌ஷன் சப்ளை’ ஊழியர். அவருக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்தக் குழுமத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட  மூன்றாவது நபர், அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் பணிபுரியும் 35 வயது நிரந்தரவாசி. தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன.

நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று பதிவான நான்காம் நபர் ஓசன் ஒர்க்ஸ் ஏஷியா நிறுவனத்தில் முக்குளிப்பாளராகப் பணிபுரியும் 42 வயது சிங்கப்பூரர்.

உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏழு நாட்களில் உள்ளூர் சமூகத்தில் 21 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய 7 நாட்களில் அந்த எண்ணிக்கை 3 மட்டுமே.

இவர்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,944 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 43 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகிறார்கள். 

தீவிர கண்காணிப்புப் பிரிவில் ஒருவர் இருக்கிறார். சமூக நிலையங்களில் 204 பேர் குணமடைந்து வருகிறார்கள். 

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,195 ஆக இருக்கிறது. 

கொவிட்-19 நோய்க்கு மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கள் 15 பேர்.

உலக அளவில் கொவிட்-19னால் 96.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon