ஏழு முறை விதிமீறிய தாதிக்கு 7 வாரச் சிறை

ஏழு முறை விதிமீறிய தாதிக்கு 7 வாரச் சிறை

1 mins read
2a8a7f20-e3d5-4ff7-97c8-979eb5026dcc
வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவை மீறி வெளியில் சென்றதால் சாங்கி பொது மருத்துவமனையில் பணிபுரியும் நூருல் அஃபிகா முகம்மது, 22, எனும் தாதிக்கு நீதிமன்றம் நேற்று ஏழு வாரச் சிறைத்தண்டனை விதித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவை மீறி வெளியில் சென்றதால் சாங்கி பொது மருத்துவமனையில் பணிபுரியும் நூருல் அஃபிகா முகம்மது, 22, எனும் தாதிக்கு நீதிமன்றம் நேற்று ஏழு வாரச் சிறைத்தண்டனை விதித்தது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வந்தபின் மார்ச் 21 முதல் ஏப்ரல் 4 வரை 14 நாள்களுக்கு அவர் வீட்டிலேயே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், அதைமீறி 'பபல் டீ' வாங்க, தோழிக்குத் திருமண ஏற்பாடுகளில் உதவ என்று குறைந்தது 7 முறை அவர் வெளியில் சென்றதாகக் கூறப்பட்டது.

தன் மீதான மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்ட நிலையில், தண்டனை விதிக்குமுன் அவர் மீதான மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்