மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் வருவோருக்கு கட்டாய பரிசோதனையால் தரைவழி எல்லைகளில் நீண்ட வரிசை

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் வருவோருக்கு கட்டாய பரிசோதனையால் தரைவழி எல்லைகளில் நீண்ட வரிசை

1 mins read
8ad546e8-a919-4a94-a796-0a4e3161a63a
படம்: சாவ் பாவ் -

மலேசியாவின் ஜோகூரில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் எல்லா வர்த்தக வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனையை சிங்கப்பூர் கட்டாயமாக்கி இருக்கிறது.

இதனை அடுத்து இரண்டு தரைவழி எல்லை சாவடிகளிலும் வரிசைகள் காணப்படுகின்றன.

கடற்பாலத்தையும் இரண்டாவது இணைப்பையும் கடந்து வரும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு அரை மணியில் முடிவு தெரியக்கூடிய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படுகிறது.

பரிசோதனை மூலம் தொற்று இல்லை என்று தெரியவருவோர் மட்டுமே சிங்கப்பூருக்குள் அனு மதிக்கப்படுகிறார்கள்.

மலேசியாவில் இருந்து காய்கறிகள், கோழி முதலானவற்றைக் கொண்டுவரும் வர்த்தக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைப் போக்குவரத்து படங்கள் காட்டுகின்றன. சிங்கப்பூரின் புதிய கட்டுப்பாடு இரு தரை வழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்