குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கான வழக்கமான பரிசோதனை செலவை அரசே ஏற்கும்

குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கான வழக்கமான பரிசோதனை செலவை அரசே ஏற்கும்

1 mins read
cd987e19-d4c5-47a8-b1eb-ba12682bc7c2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் கொவிட்-19 பரிசோதனைக்கு உரிய கட்டணத்தை வரும் செம்பம்பர் 30ஆம் தேதி வரை அரசாங்கம் ஏற்கும் என்று சுகாதார அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அரசாங்கம் தொடக்கமாக மார்ச் 31ஆம் தேதி வரைதான் செலவை ஏற்க இருந்தது. ஆனால் இப்போது அது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் தங்கி இருக்கும் ஊழியர்கள், கட்டுமானம், கடல் மற்றும் பதனீட்டுத் தொழில்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஆகியோர் இவர்களில் அடங்குவர்.

கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட அதிக ஆபத்துள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை இப்போது வழக்கமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்