சிங்கப்பூரில் மேலும் 44 பேருக்கு கொவிட்-19; மூன்றாவது நாளாக உள்ளூர் சமூகத்தில் தொற்று பதிவாகவில்லை

சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 25) நண்பகல் நிலவரப்படி புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உள்ளூர் சமூகத்திலோ விடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை.

சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 48 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். 

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 41 பேருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நால்வர் நிரந்தரவாசிகள். அவர்களில் இருவர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். மற்ற இருவரும் இந்தோனீசியா, மலேசியாவிலிருந்து வந்தவர்கள்.

நால்வர்  சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்போர், ஒருவர் நீண்டகால வருகை அனுமதி உடையவர், இருவர் மாணவர் அனுமதி அட்டை உடையவர், 33 பேர் வேலை அனுமதியுடன் இங்கு வந்தவர்கள்.

அவர்களில் 10 பேர் இல்லப் பணிப்பெண்கள்.

இவர்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 59,026 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 50 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகிறார்கள். 

தீவிர கண்காணிப்புப் பிரிவில் ஒருவர் இருக்கிறார். சமூக நிலையங்களில் 188 பேர் குணமடைந்து வருகிறார்கள். 

கொவிட்-19 நோய்க்கு மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கள் 15 பேர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon