வசதி குறைந்த 400,000 குடும்பங்களுக்கு $50 பற்றுச்சீட்டுகள்; $20 மில்லியன் ஒதுக்கீடு

வசதி குறைந்த 400,000 குடும்பங்களுக்கு $50 பற்றுச்சீட்டுகள்; $20 மில்லியன் ஒதுக்கீடு

1 mins read
3e758fa3-89ff-409a-b4f4-fb304e07ce71
குடும்பச் செலவுகளை ஈடுகட்டவும் உள்ளூர் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்கவும் உதவும் நோக்கில் 400,000 வரையிலான குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு $50 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். படம்: திமத்தி டேவிட் -

குடும்பச் செலவுகளை ஈடுகட்டவும் உள்ளூர் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்கவும் உதவும் நோக்கில் 400,000 வரையிலான குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு $50 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

கடந்தாண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டு திட்டத்தின் விரிவாக்கம் இது.

இதற்காக $20 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக பெடோக் சமூக மன்றத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இன்று (ஜனவரி 25) அறிவித்தார்.

அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றை, சுமார் 8,100 கடைகளில் பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட சமூக மன்றங்களில் அடுத்த மாதம் 8ஆம் தேதி முதல் இந்தப் பர்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். அவை இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.

இந்தத் திட்டத்துக்குத் தகுதிபெறும் குடும்பங்களுக்கு அறிவிப்புக் கடிதம் அனுப்பப்படும். பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேதி உள்ளிட்ட விவரங்கள் அந்தக் கடிதத்தில் இருக்கும்.

அந்தக் கடிதம், உங்களது அடையாள அட்டை ஆகியவற்றுடன் சென்று பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்