சிங்கப்பூரில் மேலும் 14 பேருக்கு கொவிட்-19; நான்காவது நாளாக உள்ளூர் சமூகத்தில் தொற்று இல்லை

சிங்கப்பூரில் மேலும் 14 பேருக்கு கொவிட்-19; நான்காவது நாளாக உள்ளூர் சமூகத்தில் தொற்று இல்லை

2 mins read
49691232-d991-418d-8213-7b52694e9ae9
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 26) நண்பகல் நிலவரப்படி புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் உள்ளூர் சமூகத்திலோ விடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை.

சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 44 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அவர்களில் ஓர் ஆண் குழந்தைக்கு ஒரு வயது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்திருப்போர் அனுமதி அட்டையில் இருக்கும் அந்தக் குழந்தை ஐக்கிய அரபு சிற்றரசுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தது. நேற்று முன்தினம் சிறுவனுக்கு கிருமித்தொற்று உறுதியானது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 44 பேரில் நால்வர் சிங்கப்பூரர்கள், இருவர் நிரந்தரவாசிகள், எழுவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், ஒருவர் நீண்டகால அனுமதி அட்டை உடையவர், மூவர் மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், 23 பேர் வேலை அனுமதி அட்டை உடையவர்கள், மற்றும் நால்வர் குறுகியகால வருகை அனுமதி உடையவர்கள்.

இவர்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 59,051 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 59 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகிறார்கள்.

தீவிர கண்காணிப்புப் பிரிவில் ஒருவர் இருக்கிறார். சமூக நிலையங்களில் 198 பேர் குணமடைந்து வருகிறார்கள்.

கொவிட்-19 நோய்க்கு மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கள் 15 பேர்.

குறிப்புச் சொற்கள்