சிங்கப்பூரில் மேலும் 25 பேருக்கு கொவிட்-19; அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்

சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 27) நண்பகல் நிலவரப்படி புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் உள்ளூர் சமூகத்திலோ விடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 31 அன்று ஜுவல் சாங்கி விமான நிலைஅய்த்தைப் பார்வையிட்ட இருவருக்கும் சாங்கி விமான நிலையத்தின் கிரவுன் பிளாசாவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் பிரிட்டனில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஜுவல் சங்கி விமான நிலையத்தின் ஜுவல், முனையம் 3 ஆகியவற்றில் பணிபுரிவோர், அங்கிருக்கும் கடைகளில் பணிபுரிவோர் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் நிரந்தரவாசி, இருவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் எண்மர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். ஒருவர் இந்தியாவிலிருந்து குறுகிய கால வருகை அனுமதியுடன் வந்தவர்.

இவர்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 59,071 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 50 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகிறார்கள்.

சமூக நிலையங்களில் 201 பேர் குணமடைந்து வருகிறார்கள்.

கொவிட்-19 நோய்க்கு மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கள் 15 பேர்.

அனைத்துலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்தது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.15 மில்லியனைக் கடந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!