‘சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கடும் ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்ட நால்வரும் குணமடைந்தனர்’

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ‘அனஃபிலாக்சிஸ்’ எனப்படும் கடும் ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்ட நால்வரும் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

கொவிட்-19 தடுப்பூசி மற்றும் அவற்றின் பக்க விளைவுகள் பற்றி இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது இந்தத் தகவலைத் தெரிவித்த சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் அதனால் ஏற்படக்கூடிய அபாயத்தைவிட அதிகம் என்றார்.

‘அனஃபிலாக்சிஸ்’ ஏற்பட்ட அந்த நால்வரும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். தடுப்பூசி போட்ட பிறகு அவர்களுக்கு தோலில் தடிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், உதடு வீக்கம், தொண்டை இறுக்கம், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

“அவர்களில் மூவருக்கு மூக்கழற்சி, உணவு ஒவ்வாமை போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் சில இதற்கு முன்பு ஏற்பட்டிருந்தாலும் அவர்களுக்கு ‘அனஃபிலாக்சிஸ்’ ஏற்பட்டிருக்கவில்லை.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மருத்துவத் துறை, விமானம் மற்றும் கப்பல் துறை ஆகியவற்றின் முன்களப் பணியாளார்கள், வயதானவர்கள் போன்றோருக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை இங்கு 155,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கும் நோயெதிர்ப்பாற்றல் குறைந்தவர்களுக்கும் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்வது பரிந்துரைக்கப்படவில்லை.

“மற்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும்போது ஏற்படுவது போலவே, கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கும் ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், காய்ச்சல், தலைவலி, அசதி, உடல்வலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். ஆனால், அவை ஒரு சில நாட்களில் சரியாகிவிடும்,” என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

இந்த நால்வருக்கும் ஏற்பட்டதுபோல, ‘அனஃபிலாக்சிஸ்’ பிரச்சினையை உடனடியாகக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் கட்டுப்படுத்திவிட முடியும் என்றார் அவர்.

‘அனஃபிலாக்சிஸ்’ ஏற்பட்ட அந்த நால்வரில் ஒருவர் சில மணி நேரம் கண்காணிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பினார்; மற்ற மூவரும் ஒரு நாள் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

சிங்கப்பூரில் போடப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றார் திரு ஜனில்.

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றார் டாக்டர் ஜனில்.

இருந்தாலும் குழந்தை, குடும்பம் மட்டுமின்றி தம்மையும் பாதுகாத்துக்கொள்ள பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!