சிங்கப்பூரில் மேலும் 29 பேருக்கு கொவிட்-19; உள்ளூரில் புதிய தொற்று பதிவாகவில்லை

சிங்கப்பூரில் மேலும் 29 பேருக்கு கொவிட்-19; உள்ளூரில் புதிய தொற்று பதிவாகவில்லை

1 mins read
f8a322c7-1603-4273-8b4d-1779baaed033
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 1) நண்பகல் நிலவரப்படி புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

இன்று விடுதிகளில் புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,565 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குக் கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்த நிரந்தரவாசியான 36 வயது ஆடவருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த அவர், ஜனவரி 2ஆம் தேதி வரை தனிமைப்படுத்தல் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.

அவருக்கு டிசம்பர் 31 அன்று பரிசோதனை செய்தபோது தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இந்தியாவுக்குத் திரும்புவதற்காக நேற்று முன்தினம் கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது சீராலஜி சோதனையில் அவருக்கு முன்பு தொற்று இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 29 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள்.

இங்கு மொத்தம் 59,213 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 44 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

கொவிட்-19 நோயினால் இதுவரை மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களால் மாண்டவர்கள் 15 பேர்.

உலக அளவில் இதுவரை 101.4 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2.1 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்