மூதாட்டிக்கு தாமாக ஓடிச் சென்று உதவிய வெளிநாட்டு ஊழியர்

மூதாட்டிக்கு தாமாக ஓடிச் சென்று உதவிய வெளிநாட்டு ஊழியர்

1 mins read
c0a3ea68-da80-4dd3-bdf7-14ea46e9d673
செய்தி / படம்: ஸ்டோம்ப் -

பொத்தோங் பாசிரில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் வில்லேஜுக்கு அருகில் உள்ள ஏற்றமான சாலையில் அட்டைகள் நிரம்பிய தள்ளு வண்டியை மூதாட்டி ஒருவர் தள்ள முடியாமல் சிரமத்துடன் தள்ளிச் சென்றுகொண்டிருந்தார்.

அதனைப் பார்த்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சற்றும் தயங்காமல், ஓடிச் சென்று அம்மூதாட்டிக்கு உதவினார்.

மூதாட்டியுடன் சேர்ந்து தள்ளுவண்டியை ஏற்றமான சாலையில் வண்டியைத் தள்ளிச் சென்று உதவினார்.

நேற்று மாலை சுமார் 6 மணியளவில் பொத்தோங் பாசிரில் உள்ள பூங்கா இணைப்புப் பகுதியில் மெதுவோட்டப் பயிற்சியில் ஈடுபட்ட ஸ்டோம்ப் வாசகர் 'வான்' இந்தச் சம்பவத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனதாகக் குறிப்பிட்டார்.

"அந்த வெளிநாட்டு ஊழியரின் தன்னலமற்ற செயலைப் பாராட்டி, நன்றி தெரிவிப்பதாக," அந்த வாசகர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்