நல்லாசிரியர் விருது 2020/2021க்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் முர­சும் சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­க­மும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வும் இணைந்து வழங்­கும் ‘நல்­லா­சி­ரி­யர் விருது’ தமி­ழா­சி­ரி­யர்­க­ளின் உன்­ன­தப் பணியை அங்­கீ­க­ரித்­துப் பாராட்­டும் மிக உய­ரிய விரு­தா­கக் கரு­தப்­படு­கின்­றது.

நல்­லா­சி­ரி­யர் விரு­துக்­குத் தகுதி பெறு­வோர்:

 தமிழ்­மொ­ழி­யின்­பால் மாண­வர்­க­ளுக்கு ஆர்­வத்­தை­யும் புத்து ணர்ச்­சி­யை­யும் ஊட்­டிக் கற்­பிப்­ப­வராக விளங்க வேண்­டும்.

 புத்­தாக்­க­மும் படைப்­பாக்­க­மும் கொண்ட கற்­பித்­தல் முறை­களைப் பயன்­ப­டுத்தி மாண­வர்­களின் கற்­றல் ஈடு­பாட்­டுக்கு வழி­வகுப்­ப­வ­ரா­கத் திகழ வேண்­டும்.

 மாண­வர்­க­ளின் நல­னில் அக்­க­றை­கொண்டு அவர்­க­ளி­டத்­தில் விரும்­பத்­தக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்­டும்.

நல்­லா­சி­ரி­யர் விரு­துக்கு முன்­மொ­ழி­யும் வழி­முறை பற்­றிய குறிப்பு­கள்:

 விரு­துக்­குத் தகு­தி­யா­ன­வர் எனத் தாங்­கள் கரு­தும் ஆசி­ரி­ய­ரைத் தெரி­வு­செய்து, உங்­கள் தெரி­வுக்­கான கார­ணங்­களை விளக்கி எழுதி, முன்­மொ­ழி­யும் படி­வத்தை நிறைவு செய்து அனுப்­ப­வும். நீங்­கள் பரிந்­து­ரைக்­கும் ஆசி­ரி­யர் விரு­துக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் அவ­ருக்கு விரு­தும் ரொக்­க­மும் வழங்­கப்­படும்.

 தொடக்­கப்­பள்ளி, உயர்­நிலைப்­பள்ளி, தொடக்­கக் கல்­லூரி, மில்­லெ­னியா கல்வி நிலை­யம் ஆகி­ய­வற்­றில் தமிழ் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­கள் அனை­வ­ரும் இவ்­விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­ப­ட­லாம்.

 மாண­வர்­கள், பெற்­றோர்­கள், சக ஆசி­ரி­யர்­கள், முன்­னாள் மாண­வர்­கள், பள்­ளித் தலை­வர்­கள் ஆகி­யோர் நல்­லா­சி­ரி­யர் விரு­துக்கு ஆசி­ரி­யர்­க­ளைப் பரிந்­து­ரைத்து

முன்­மொ­ழி­யும் படி­வங்­களை இம்­மா­தம் 8ஆம் தேதி திங்­கட்­கி­ழமை முதல் அனுப்பி வைக்­க­லாம்.

 முன்­மொ­ழி­யும் படி­வங்­களை அனுப்பி வைக்­க­வேண்­டிய இறு­தி­நாள் ஏப்­ரல் மாதம் 30ஆம் தேதி.

2002ஆம் ஆண்டு முதல், நல்­லா­சி­ரி­யர் விருது சுமார் 200 தொடக்­கப் பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி, பல்­க­லைக்­க­ழக புகு­முக நிலை­யங்­களில் கற்­பிக்­கும் நல்­லா­சி­ரி­யர்­களை அங்­கீ­க­ரித்­துள்­ளது.

இந்த ஆண்டு மொத்­தம் ஆறு விரு­து­கள் தொடக்­கப் பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி, பல்­க­லைக்­க­ழக புகு­முக நிலை­யங்­கள் பிரி­வில் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

விரு­து­கள் பற்­றிய விவ­ரங்­கள் இவ்­வாண்டு செப்­டம்­பர் மாதத்­தில் நடைபெறும் விருதளிப்பு விழாவில் அறி­விக்­கப்­படும்.

பரிந்­துரை செய்­யும் படி­வங்­களை அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் பெற்­றுக்­கொள்­ள­லாம் அல்­லது www. tllpc.sg அல்­லது www.tamilmurasu.com.sg ஆகிய இணை­யப் பக்­கங்களில் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

இணை­யம் வழி­யும் உங்­கள் பரிந்­து­ரை­களை https://go.gov.sg/mitt-nomination-tl மற்றும் https://go.gov.sg/mitt-form-el ஆகிய முக­வரிகள் வழி­யா­க­வும் சமர்ப்­பிக்­க­லாம்.

படிவங்கள்:

தமிழ்           ஆங்கிலம்

நல்­லா­சி­ரி­யர் விரு­தைத் தவிர, 2014 முதல் வழங்­கப்­பட்டு வரும் தேசிய கல்­விக் கழ­கத்­தின் சிறப்பு பயிற்சி ஆசி­ரி­யர் விருது, 2012ஆம் ஆண்டு முதல் வழங்­கப்­பட்டு வரும் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது ஆகிய மேலும் இரு விரு­து­களும் நிகழ்ச்­சி­யன்று வழங்­கப்­படும்.

நல்­லா­சி­ரி­யர் விரு­து போட்டி பற்றிய மேல் விவரங்களுக்கு MOE_TLLPC_Secretariat @moe.gov.sg எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!