சாஃப்ரா ஈசூன் விபத்தில் உயிரிழந்த ஏசிஎஸ்(ஐ) மாணவரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது

சாஃப்ரா ஈசூனில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த ஏசிஎஸ்(ஐ) பள்ளி மாணவரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.

சுமார் 20 பேர் பங்கேற்ற அந்த ஈமச்சடங்கு நிகழ்ச்சியில் 15 வயது ஜெத்ரோ புவாவின் நல்லுடலுடன் ஊர்வலம் இன்று காலை 11.30 மணியளவில் மண்டாய் தகனச் சாலையை நோக்கி கிளம்பியது. பிற்பகல் 12.10 மணியளவில் மண்டாய் தகனச் சாலையை அது அடைந்தது.

அவரது நல்லுடலைச் சுமந்த சவப்பெட்டி தகனத்துக்காக தள்ளப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தார் அங்கிருந்து சுமார் 12.40 மணியளவில் கண்ணீருடன் வெளியேறினர்.

தங்களது ஒரே மகனான ஜெத்ரோ, தங்களைப் பெருமைப்படுத்தியதுடன் அவரது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தார் என தமது புகழுரையில் ஜெத்ரோவின் தந்தை டோனி புவா குறிப்பிட்டார்.

அவரை மகனாகப் பெற்றது தம் மனைவி ஜெஹான்னுக்கும் தமக்கும் வரப்பிரசாதம் என்றார் அவர்.

“மரியாதை மிகுந்த, அன்பான, ஆதரவான, நன்றியுடைய மகனைத் தங்களுக்கு அருளிய கடவுளுக்கு நன்றி,” என்றார் திரு டோனி புவா.

கடந்த புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஈசூன் சாஃப்ராவில் உயர நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த ஜெத்ரோ பிடியை நழுவவிட்டதை அடுத்து அவர் அணிந்திருந்த பாதுகாப்புக் கவசத்துடன் அந்தரத்தில் தொங்கினார்.

அப்போது சுய நினைவை அவர் இழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படையின் துணை மருத்துவ அதிகாரிகள் அவருக்கு இதய செயல்பாடு மீட்பு சிகிச்சை அளித்து, பின்னர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் காலை அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகத்துக்கிடமளிக்கும் வகையில் ஏதும் இல்லை என்று கூறப்பட்டாலும் போலிசார் விசாரணையைத் தொடர்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை முழுவதுமாக நிறைவு பெறும் வரை, அனைத்துப் பள்ளிகளுக்கும் உயரங்களில் இடம்பெறும் வெளிப்புற நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ரத்து செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!