சிங்கப்பூரில் ஜனவரியில் 3 கடற்கொள்ளை சம்பவங்கள்

சிங்கப்பூரில் ஜனவரியில் 3 கடற்கொள்ளை சம்பவங்கள்

1 mins read
464bb4c2-b26b-4ef0-8272-865cf03e9383
சிங்கப்பூர் நீரிணையில் ஜனவரி மாதம் மூன்று கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் நீரிணையில் ஜனவரி மாதம் மூன்று கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மூன்றுமே இந்தோனீசியாவின் பிந்தான் தீவுக்கு அருகில் நடந்ததாகவும் அதே இடத்தில் சென்ற ஆண்டு 30 கடற்கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததாகவும் கூறப்பட்டது.

சிங்கப்பூருக்குத் தெற்கே உள்ள 105 கிலோமீட்டருடைய அக்குறிப்பிட்ட நீரிணை, வர்த்தகச் செயல்பாடுகளுக்கு ஒரு முக்கிய பாதையாகும்.

இங்கு தொடர்ந்து கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்வது கவலைக்குரியதாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்