சிங்கப்பூரில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் மூவருக்கு தொற்று

சிங்கப்பூரில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் மூவருக்கு தொற்று

1 mins read
78ffcbd5-f239-4946-979c-b63998d63338
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 11) நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று உள்ளூர் சமூகத்தில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்ற 9 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஒருவர் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்.

ஊழியர் தங்குவிடுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்