சிங்கப்பூரில் மேலும் 14 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 59,800

சிங்கப்பூரில் மேலும் 14 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 59,800

1 mins read
2c261eac-7396-457d-a687-703e25983c14
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 14) நண்பகல் நிலவரப்படி புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேரில் 13 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

எஞ்சிய ஒருவர் திட்டப்பணி ஒன்றுக்காக சிங்கப்பூருக்கு கடந்த புதன்கிழமை வந்தபோது அவருக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவர் கட்டுப்படுத்தப்பட்ட பயணத் திட்டத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அத்தகைய பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு செய்யப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது,

உள்ளூர் சமூகத்திலோ, விடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்