சிங்கப்பூரில் புதிய கிருமித்தொற்று குழுமம்; சைனாடவுனில் கடை வைத்திருப்பவரின் மனைவி, மூத்த மகனுக்கு தொற்று

சிங்கப்பூரில் புதிய கிருமித்தொற்று குழுமம்; சைனாடவுனில் கடை வைத்திருப்பவரின் மனைவி, மூத்த மகனுக்கு தொற்று

2 mins read
78fc8e7c-b625-423e-be5c-b0a756377a31
சைனாடவுன் காம்ப்ளெக்சில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றின் உரிமையாளரின் மனைவி, அவரது மூத்த மகன் ஆகியோருக்கு இந்த வாரத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிங்கப்பூரில் புதிய கிருமித்தொற்று குழுமம் ஒன்று உருவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சைனாடவுன் காம்ப்ளெக்சில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றின் உரிமையாளரின் மனைவி, அவரது மூத்த மகன் ஆகியோருக்கு இந்த வாரத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிங்கப்பூரில் புதிய கிருமித்தொற்று குழுமம் ஒன்று உருவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கடந்த வாரம் உள்ளூர் சமூகத்தில் பதிவான கிருமித்தொற்று சம்பவங்கள் இவை.

கடைக்காரரின் மகனான 33 வயது சிங்கப்பூரர், அவரது தந்தைக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதும் கடந்த புதன்கிழமை தனிமைப்படுத்தல் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். மகனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு வியாழக்கிழமை தொற்று இருந்தது தெரியவந்தது. அவரது சீராலஜி பரிசோதனை முடிவுகளின்படி, அவரது தொற்று முன்பு ஏற்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

கடைக்காரரின் மனைவியான 62 வயது சிங்கப்பூரரும் கடந்த புதன்கிழமை தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கும் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிருமித்தொற்று உறுதியானது.

இல்லத்தரசியான அவரது சீராலஜி பரிசோதனை முடிவுகளின்படி, அவருக்கு தற்போது தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

சைனாடவுனில் உள்ள கடைக்காரர்களுக்கு கிருமித்தொற்று பரிசோதனைகள் செய்தபோது கடந்த புதன்கிழமை அந்த சில்லறை விற்பனைக் கடைக்காரருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 66 வயதான அந்த நிரந்தரவாசிக்கு ஜனவரி 28 முதலே இருமல் இருந்தது. வாசம் அறியமுடியா தன்மை உட்பட கிருமித்தொற்று அறிகுறிகள் கடந்த செவ்வாய்க்கிழமை தென்பட்டன.

அவரது இளைய மகனான 32 வயது சிங்கப்பூரருக்கு கடந்த வியாழக்கிழமை தொற்று உறுதியானது. அவர் சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள ஸ்வென்சன்ஸ் கடையில் பகுதிநேர ஊழியராகப் பணிபுரிபவர். அவர் கடந்த திங்கட்கிழமை அங்கு பணிக்குச் சென்றிருந்தார்.

இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆயினும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் 'டிரேஸ் டுகெதர்' சாதனைத்தை வைத்திருந்தாலும் தாங்கள் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சமூகப் பரவலைக் குறைக்க உதவும் வகையில் டிரேஸ் டுகெதர் செயலி அல்லது சாதனத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என அமைச்சு நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்