தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனுமதியின்றி கூடி ஆர்ப்பாட்டம்: 3 பேரிடம் விசாரணை

1 mins read
18255398-15d4-4c18-902c-f2996a726b56
சிங்கப்பூரில் உள்ள மியன்மார் தூதரகத்துக்கு (படம்) வெளியே அனுமதி இல்லாமல் நடந்த  ஒரு கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் 48 மற்றும் 61 வயதுள்ள இரண்டு ஜப்பானிய ஆடவர்களும் 49 வயதுள்ள இந்தோனீசிய ஆடவர் ஒருவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலிஸ் தெரிவித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் உள்ள மியன்மார் தூதரகத்துக்கு வெளியே அனுமதி இல்லாமல் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் 48 மற்றும் 61 வயதுள்ள இரண்டு ஜப்பானிய ஆடவர்களும் 49 வயதுள்ள இந்தோனீசிய ஆடவர் ஒருவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

மியன்மார் மக்களுக்கு தங்கள் ஆதரவைப் புலப்படுத்தும் வகையில் அந்தத் தூதரகத்துக்கு வெளியே மூன்று ஆடவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக போலிசாருக்கு இம்மாதம் 10ஆம் தேதி பிற்பகலில் செய்தி கிடைத்தது.

இரண்டு வாசக அட்டைகள், கைபேசிகள், ஒரு கடிதம் ஆகியவை கைப்பற்றப்பட்ட தாகவும் புலன்விசாரணை தொடர்கிறது என்றும் போலிஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்