கொவிட்-19 கிருமித்தொற்றினால் தொடர்ந்து வரும் நிலையற்ற பொருளாதார சூழ்நிலையைப் பொருட்டு $900 மில்லியன் மதிப்புள்ள குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இன்று (பிப்ரவரி 16) அறிவித்தார்.
* ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்தின் செலவுகளுக்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும் பற்றுச்சீட்டுகள் இத்திட்டத்தில் வழங்கப்படும். அதோடு சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளும் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.
* கிட்டத்தட்ட 1.3 மில்லியன் குடும்பங்கள் தலா $100 சமூக மேம்பாட்டு மன்றத்தின் பற்றுச்சீட்டுகளைப் பெறுவார்கள். பங்குபெறும் குடியிருப்பு வட்டார கடைகளிலும் உணவங்காடிக் கடைகளிலும் இந்த பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம். இது குறித்த தகவல்களை சமூக மேம்பாட்டு மன்றங்கள் பிறகு அறிவிப்பார்கள். இத்திட்டத்தின் நிதிக்கு மேலும் $150 மில்லியன் தொகையளவு இம்மன்றங்களுக்கு அரசாங்கம் வழங்கும்.
* தகுதிப்பெறும் வீவக விடுகளில் தங்கும் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 1½ முதல் 3½ மாதங்களுக்கான சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் கிடைக்கும் என்று திரு ஹெங் தெரிவித்தார். ஏறக்குறைய 950,000 சிங்கப்பூர் குடும்பங்களுக்கு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையில்லான காலக்கட்டத்தில் இத்தளுபடிகள் வழங்கப்படும்.
* குறைந்த வருமானம் கொண்ட ஏறத்தாழ 1.4 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு கூடுதலாக $200 மதிப்புடைய பொருள் சேவை வரி பற்றுச்சீட்டு - ரொக்கம் (சிறப்புத் தொகை) வழங்கப்படும். இது வழக்கமாக வழங்கப்படும் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டு - ரொக்கத்திற்கும் மேல் வழங்கப்படுகிறது.
* கிட்டத்தட்ட 950,000 குடும்பங்களுக்கு பயனீட்டு செலவுகளுக்கான கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கும். பொருள் சேவை வரி பற்றுச்சீட்டு -யு- சேவ் (சிறப்புத் தொகை) கட்டணத்தின் மூலம் $120 முதல் $200 வரை உள்ள இந்த தொகை ஏப்ரல் முதல் ஜூலை வரையில் வழங்கப்படும். வழக்கமான வருடாந்திர தள்ளுபடிகளை மையமாக்கி பார்த்தால், அதில் 1½ மடங்கு அதிகமாக கிடைக்கும்.
* 21 வயதுக்கு கீழ் உள்ள சிங்கப்பூர் குழந்தைகளுக்கு - குழந்தை மேம்பாட்டு கணக்கு, எடுசேவ் கணக்கு, அல்லது உயர்நிலைக் கல்விக்குப் பிந்திய கணக்கில் $200 தொகை நிரப்பப்படும். இது ஏறக்குறைய 780,000 குழந்தைகளுக்கு பயனளிக்கும்.