$401,000 மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

$401,000 மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

1 mins read
939cecba-632c-4d41-b55a-2978834b4c56
மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, சுமார் $401,000 மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றி மூவரை கைது செய்துள்ளது. படங்கள்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -
multi-img1 of 3

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, சுமார் $401,000 மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றி மூவரை கைது செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை பொங்கோல் எட்ஜ்டேல் பிளைய்ன்சில் உள்ள வீட்டை சோதனையிட்டு 24 வயது சிங்கப்பூரரான முதல் சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர், 17வது மாடியிலிருந்து சன்னல் வழியாக தப்பிக்க முயற்சி செய்ததாகவும் அதிகாரிகள் அவரை இழுத்துப் பிடித்து கைது செய்ததாகவும் அறிக்கை தெரிவித்தது.

அவரிடமிருந்து 1,914 கிராம் எடையுள்ள பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதர இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர், சிங்கப்பூரர். மற்றொருவர் மலேசியர்.

பாலஸ்தியர் ரோட்டில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அருகில் இருந்த ஹோட்டல் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கிருந்த போதைப் பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மூவரையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்