‘72 வயது முதியவருக்கு மாரடைப்பு; தடுப்பூசியால் ஏற்பட்ட அறிகுறி இல்லை’

மார­டைப்­பால் பாதிக்­கப்­பட்ட 72 வயது ஆட­வர் நேற்று முன்­தி­னம் இரவு டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­ட­தாக நேற்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

நேற்று முன்­தி­னம் அவர் ஃபைசர்-பயோ­என்­டெக் நிறு­வ­னத்­தின் கொவிட்-19 முதல் தவணை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால் அவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­டது என்­ப­தற்­கான எந்த அறி­கு­றி­யும் இல்லை என டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் முதல் கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

அவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­ட­தற்­கான கார­ணத்தை அறி­யும் பொருட்டு மேற்­கொண்டு பரி­சோ­த­னை­களை மருத்­து­வக்­குழு நடத்தி வரு­கிறது.

புற்­று­நோய், உயர் ரத்த அழுத்­தம், மிகைக் கொழுப்பு போன்ற பிரச்­சி­னை­கள் அவ­ருக்கு இருந்­தது என்றும் குறிப்­பி­டப்­பட்­டது.

தடுப்­பூசி போடு­வ­தற்கு முன்பு, அவ­ருக்குத் தடுப்­பூசி ஏற்­பு­டை­யதா என்­பது குறித்து பயிற்சி அளிக்­கப்­பட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்புப் பணி­யா­ளர் பரி­சோ­தித்­தார் என்று சுக­தார அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­தது.

கொவிட்-19 தடுப்­பூசி நடை­மு­றை­க­ளின்­படி, தடுப்­பூசி போட்ட பிறகு கிட்டத்தட்ட 30 நிமி­டங்­க­ளுக்கு அவர் கண்­கா­ணிப்­பில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லால் எளி­தில் பாதிப்­புக்­குள்­ளா­கக்­கூ­டிய மூத்­தோ­ருக்கு தடுப்­பூசி போட்டு அவர்­க­ளைப் பாது­காப்­பது முக்­கி­யம் என்று குறிப்­பிட்­டது அமைச்சு.

ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி மூத்­தோ­ரி­டையே உயி­ரி­ழப்பு அபா­யத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான ஆதா­ரம் எதை­யும் உலக சுகா­தார நிறுவனம் கண்­டு­பி­டிக்­க­வில்லை என்­ப­தை­யும் அமைச்சு மேற்­கோள் காட்­டி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!