சிங்கப்பூரில் வேலை அனுமதிச் சீட்டு வைத்துள்ள இந்திய நாட்டவர் 15 பேரிடம் போலி பட்டக்கல்விச் சான்றிதழ்கள்

சிங்கப்பூரில் வேலை அனுமதிச் சீட்டு வைத்துள்ள இந்திய நாட்டவர் 15 பேரிடம் போலி பட்டக்கல்விச் சான்றிதழ்கள்

2 mins read
81e4cb1f-a64b-481a-86e5-7606b76ed621
மானவ் பார்தி பல்கலைக்கழகம். படம்: ஊடகம் -

சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் இந்­திய நாட்­ட­வர்­கள் 15 பேரி­டம் போலி­யான கல்­விச் சான்­றி­தழ்­க­ளைச் சம­ர்ப்­பித்­த­தற்­காக விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக மனி­த­வள அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

அவர்­கள் இங்­குள்ள வேலை­களுக்கு விண்­ணப்­பிக்­கும்­போது ஹிமாச்­சல பிர­தே­சத்­தில் உள்ள மானவ் பாரதி பல்­க­லைக்­க­ழத்­தின் போலி­யான கல்­விச் சான்­றி­தழ்­களை இணைத்து சமர்ப்­பித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கம் கடந்த 11 ஆண்­டு­க­ளாக 36,000 போலி கல்­விச் சான்­றி­தழ்­களை விற்­றுள்­ள­தாக இம்­மா­தத் தொடக்­கத்­தில் டைம்ஸ் ஆஃப் இந்­தியா நாளி­தழ் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

மானவ் பாரதி பல்­க­லைக்­க­ழ­கம் வழங்­கி­யுள்ள 41,000 பட்­டங்­களில் 5,000 பட்­டங்­கள் மட்­டுமே உண்­மை­யா­னவை என்று இந்­தி­யா­வின் சிறப்பு புல­னாய்­வுக் குழு கண்­ட­றிந்­துள்­ளது. இதன் கார­ண­மாக அப்­பல்­க­லை­யின் தலை­வ­ரான திரு ராஜ்­கு­மார் ரானாவை ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து கொண்டு வர இந்­திய போலிஸ் முயன்று வரு­கிறது என்­றும் அச்­செய்தி கூறி­யது.

மேற்­கூ­றப்­பட்ட 11 பேர் போலி­யான கல்­விச் சான்­றி­தழ்­க­ளைச் சமர்ப்­பித்­தி­ருந்­தது நிரூ­பிக்­கப்­பட்­டால், அவர்­க­ளின் வேலை அனு­மதிச் சீட்டு உட­ன­டி­யாக ரத்து செய்­யப்­பட்டு, அவர்­கள் இனி­மேல் சிங்­கப்­பூ­ரில் வேலை செய்ய முடி­யா­த­படி நிரந்தரத் தடை விதிக்­கப்­படும் என்று அமைச்சு விளக்­கி­யது.

"வெளி­நாட்டு ஊழி­யர் வேலை­வாய்ப்­புச் சட்­டத்­தின்­படி அவர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வும் வாய்ப்பு உண்டு. இந்­தக் குற்­றத்­துக்கு $20,000 வரை­ அப­ரா­தம், இரண்டு ஆண்­டு­கள் வரை­ சிறை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்," என்­றும் அமைச்சு கூறி­யது.

வேலைக்கு விண்­ணப்­பிக்­கும் போது போலி­யான கல்­வித் தகு­தி­யைத் தெரி­வித்­த­தால், கடந்த ஐந்து ஆண்­டு­கள் கணக்­கு­ப்படி, ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக 660 பேருக்கு சிங்­கப்­பூ­ரில் வேலை செய்ய நிரந்­தரத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே கால­கட்­டத்­தில், ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக ஓர் ஆண்­டில் எட்டு வெளி­நாட்­டி­னர் போலி­யான கல்­வித் தகு­தி­க­ளைத் தெரி­வித்­த­தற்­காக குற்­றம் சாட்­டப்­பட்டு, தண்­டனை பெற்­றுள்­ள­னர்.

தாங்­கள் வேலைக்கு அமர்த்த விரும்­பும் ஊழி­யர்­கள் உண்­மை­யான கல்­வித் தகு­தி­க­ளைத் தெரி­விப்­பதை உறுதி செய்­யும் அடிப்­படைப் பொறுப்பு முத­லா­ளி­க­ளி­டம் இருக்க வேண்­டும் என்று கூறிய அமைச்சு, தங்களுக்குக் கிடைக்கும் வேலை அனு­மதி விண்­ணப்­பங்­களைத் தானும் தனிப்­பட்ட முறை யில் சோத­னை­களை நடத்தி வரு வதாகத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்