சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 20) புதிதாக 12 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவர்களுடன் சேர்த்து கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,858க்கு அதிகரித்துள்ளது.
உள்ளூர் சமூகத்திலோ, தங்குவிடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று இல்லை என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கை கூறியது.
நேற்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 14 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

