சிங்கப்பூரில் மேலும் 10 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்குத் தொற்று

சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 22) புதிதாக 10 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஒருவர் மட்டும் உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்.

இவர்களுடன் சேர்த்து கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,879க்கு அதிகரித்துள்ளது.

தங்குவிடுதிகளில் புதிய கிருமித்தொற்று இல்லை என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கை கூறியது.

நேற்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 11 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அவர்களில், இரண்டு சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசி ஒருவரும் இந்தியா மற்றும் நேப்பாளத்திலிருந்து வந்தவர்கள்.

நேற்றைய நிலவரப்படி, 59,716 பேர் கொவிட்-19லிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் ஒருவர் உட்பட, தற்போது 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதர 87 பேர் சமூக வசதிகளில் தங்கி குணமடைந்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் கிருமித் தொற்று காரணமாக 29 பேர் உயிரிழந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!