விடுதியில் வசிக்கும் ஓர் ஊழியர் உட்பட புதிதாக நால்வருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 23) புதிதாக நால்வர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஒருவர் மட்டும் ஊழியர் தங்குவிடுதிவாசி.

இவர்களுடன் சேர்த்து கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,883க்கு அதிகரித்துள்ளது.

உள்ளூர் சமூகத்தில் புதிய கிருமித்தொற்று இல்லை என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கை கூறியது.

நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர், ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிப்பந்தியின் கணவர் என்று சுகாதார அமைச்சின் நேற்றைய அறிக்கை தெரிவித்தது.

அந்த 48 வயது ஆடவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகப் பணிபுரிபவர். ஆனால், இம்மாதத் தொடக்கத்திலிருந்து அவர் பணிக்குச் செல்லவில்லை.

அவரது மனைவிக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட பிப்ரவரி 9 முதல் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 15ல் அவருக்கு வாசனையை அறியும் திறன் குறைந்தபோதும் அது குறித்து அவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை.

பிப்ரவரி 20ல் காய்ச்சல் ஏற்பட்டபோது தாமாக மருந்து உட்கொண்டாரேயொழிய, சுகாதார அமைச்சிடம் தெரிவிக்கவில்லை.

அதற்கு அடுத்த நாள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான விதிமுறைகளின்படி, பரிசோதித்தபோது அவருக்கு தொர்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு பி117 உருமாறிய கிருமித்தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் சமுதாயப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!