உள்ளூர் சமூகத்தில் ஒருவர் உட்பட 7 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் புதிதாக ஏழு பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று (பிப்ரவரி 24) அறிவிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்தவர். மற்ற ஆறு பேரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்ததும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

வெளிநாட்டு ஊழியருக்கான தங்கும் விடுதியைச் சேர்ந்த ஊழியர் எவரும் பாதிக்கப்படவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பங்ளாதே‌ஷ் ஆடவர், சிங் உட்ஒர்க்கிங் நிறுவனத்தில் விநியோகிப்புப் பணி உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

கிராஞ்சியில் உள்ள கட்டடத் தளவாடங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்த அந்த பங்ளாதே‌ஷ் ஆடவருக்கு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு இல்லை. அவர் கனரக வாகனங்களில் இருந்து சரக்குகளை இறக்கும் ஏற்றும் பணியைச் செய்துவந்தார்.

கிராஞ்சி வேயில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி ஒன்றில் அவர் தங்கியிருந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான கொவிட்-19 சோதனையின் போது அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

பின்னர் இரண்டாவது முறையாக திங்கள்கிழமை அவருக்கு கொவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு தொண்டைப்புண், இருமலால் அவதி ஏற்பட்டது. இந்தச் சோதனையில் அவருக்குத் தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டதும் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!