சிங்கப்பூரில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் புதிதாக 12 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று (பிப்ரவரி 27) அறிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்ததும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

வெளிநாட்டு ஊழியருக்கான தங்கும் விடுதியைச் சேர்ந்த ஊழியர் எவரும் பாதிக்கப்படவில்லை.

சிங்கப்பூரில் இதுவரை 59,925 பேருக்கு கிருமி தொற்றியுள்ள நிலையில், 59,788 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஒருவர் உட்பட 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூக பராமரிப்பு நிலையங்களில் 66 பேர் தேறி வருகின்றனர்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் 29 பேர் உயிரிழந்தனர். கிருமித்தொற்று ஏற்பட்டிருந்த காலத்தில் வேறு காரணங்களால் 15 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் கொரோனா தொற்றால் 113 மில்லியன் பேர் பாதிப்புக்குள்ளாகினர், 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!