உள்துறைக் குழு பணியாளர்கள் 26,200 பேருக்குத் தடுப்பூசி

உள்துறைக் குழு பணியாளர்கள் 26,200 பேருக்குத் தடுப்பூசி

1 mins read
c635f2ec-f75b-4419-9e4c-fe445d849bef
உள்துறைக் குழு முன்களப் பணியாளர்கள் ஏறக்குறைய 26,200 பேருக்கு வெள்ளிக்கிழமை கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை -
multi-img1 of 3

உள்துறைக் குழு முன்களப் பணியாளர்கள் ஏறக்குறைய 26,200 பேருக்கு வெள்ளிக்கிழமை கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.

அவர்களில் 19,058 அதிகாரிகள் இரண்டாவது ஊசியைப் போட்டுக்கொண்டதாக உள்துறை அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டது.

உள்துறை அமைச்சின் தடுப்பூசித் திட்டம் ஜனவரி 11ல் தொடங்கியது. முதலாவதாக முன்களச் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் 80 அதிகாரிகளுக்கு ஊசி போடப்பட்டது.

தொடர்ந்து அமலாக்கம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பணியில் ஈடுபட்டு இருக்கும் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

அமைச்சின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

போலிஸ் ஆணையாளர் ஹூங் வீ டெக் பிப்ரவரி 17ஆம் தேதி உள்துறைக் குழு பயிலகத்தில் தன்னுடைய இரண்டாவது ஊசியைப் போட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்